பர்னிச்சர் கடை உரிமையாளர் வீட்டில் நகை, பணம் திருட்டு
சிங்கம்புணரியில் பர்னிச்சர் கடை உரிமையாளர் வீட்டில் நகை, பணம் திருடு போனது. தொடரும் திருட்டு சம்பவங்களால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
சிங்கம்புணரி,
சிங்கம்புணரியில் பர்னிச்சர் கடை உரிமையாளர் வீட்டில் நகை, பணம் திருடு போனது. தொடரும் திருட்டு சம்பவங்களால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
நகை, பணம் திருட்டு
சிங்கம்புணரி விழுப்பினி களம் பால் பண்ணை தேத்தாங்காடு பகுதியில் வசிப்பவர் பாலமுருகன் (வயது 45). இவர் சிங்கம்புணரியில் திண்டுக்கல் சாலை பகுதியில் பர்னிச்சர் கடை நடத்தி வருகிறார். பாலமுருகன் தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் திருப்பதிக்கு சென்று விட்டு நேற்று காலை வீடு திரும்பியுள்ளார்.
அப்போது பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 8½ பவுன் தங்க நகைகள், அரை கிலோ வெள்ளி, ரூபாய் 80 ஆயிரம் ஆகியவற்றை காணவில்லை. மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.
பொதுமக்கள் அச்சம்
இதுகுறித்து சிங்கம்புணரி போலீசில் பாலமுருகன் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துமீனாட்சி, சப்-இன்ஸ்பெக்டர் குகன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து நகைகளை திருடிய மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
கடந்த மாதத்தில் மட்டும் தொடர்ச்சியாக மூன்று முறை சிங்கம்புணரி பகுதியில் திருட்டு சம்பவங்கள் நடந்துள்ளது. இதனால் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.