லாரியில் துணி பண்டல்கள் திருட்டு


லாரியில் துணி பண்டல்கள் திருட்டு
x

லாரியில் துணி பண்டல்கள் திருட்டு பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரை


திருச்சி மணப்பாறை அம்மாபட்டி வடக்கு பகுதியை சேர்ந்தவர் ராமசாமி (வயது 44). லாரி டிரைவர். சம்பவத்தன்று இவர் லாரியில் ஜவுளி கடைக்கு சரக்குகளை ஏற்றிக்கொண்டு மதுரைக்கு வந்தார். பின்னர் தெற்குவெளி வீதியில் உள்ள குடோன் முன்பாக லாரியை நிறுத்தி இருந்தார். அப்போது லாரியில் இருந்த 5 துணி பண்டல்களை மர்மநபர்கள் திருடி சென்று விட்டனர். இது குறித்து டிரைவர் ராமசாமி தெற்கு வாசல் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து துணி பண்டல்கள் திருடியவர்களை தேடி வருகின்றனர்.


Next Story