அம்மன் கோவிலில் நகை, பணம் திருட்டு
கிருஷ்ணாபுரம் அருகே அம்மன் கோவிலில் நகை, பணம் திருட்டு போனது.
தர்மபுரி மாவட்டம் கிருஷ்ணாபுரம் அருகே உள்ள மோட்டுப்பட்டியில் அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று சிறப்பு பூஜைகள் நடத்த கோவில் நிர்வாகிகள் சென்றனர். அப்போது கோவில் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் உள்ளே சென்று பார்த்தனர். அப்போது அம்மன் கழுத்தில் அணிவித்து இருந்த 1 பவுன் தாலி திருட்டு போனது. மேலும் கோவிலில் உண்டியல் உடைக்கப்பட்டு அதிலிருந்த பணம் திருட்டு போனது தெரியவந்தது. மர்ம நபர்கள் நள்ளிரவு கோவில் பூட்டை உடைத்து நகை, உண்டியல் பணத்தை திருடி சென்றது தெரிந்தது. இது தொடர்பாக கோவில் நிர்வாகிகள் கிருஷ்ணாபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர். அம்மன் கோவிலில் நகை, பணம் திருட்டு போன சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.