அடுத்தடுத்து 7 கடைகளின் பூட்டை உடைத்து பணம் திருட்டு
பட்டுக்கோட்டை அருகே அடுத்தடுத்து உள்ள 7 கடைகளின் பூட்டை உடைத்து பணத்தை திருடியவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
பட்டுக்கோட்டை அருகே அடுத்தடுத்து உள்ள 7 கடைகளின் பூட்டை உடைத்து பணத்தை திருடியவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
காய்கறி கடை
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள துவரங்குறிச்சி முக்கூட்டுச் சாலை பகுதியை சேர்ந்தவர் மாரிமுத்து (வயது 52). இவர் அப்பகுதியில் காய்கறி கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அவர் தன்னுடைய காய்கறி கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றுவிட்டார்.
நேற்று காலை கடையைத் திறக்க வந்த போது அவருடைய கடை பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. அருகில் உள்ள ஓட்டல் பூட்டும் உடைக்கப்பட்டு கல்லாவில் இருந்த பணமும் திருடப்பட்டு இருந்தது.
பணம் திருட்டு
மேலும் அருகிலுள்ள மளிகை கடை, டீக்கடை, பெட்டிக்கடை உள்ளிட்ட 7 கடைகளும் பூட்டு உடைக்கப்பட்டு அக்கடைகளில் இருந்த ரூ. 6,500 திருடப்பட்டு இருந்தது. இதுகுறித்து மாரிமுத்து பட்டுக்கோட்டை தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஒரே பகுதியில் உள்ள அடுத்தடுத்த 7 கடைகளின் பூட்டை உடைத்து பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.