பெண்ணிடம் 5 பவுன் நகை திருட்டு


பெண்ணிடம் 5 பவுன் நகை திருட்டு
x

பெண்ணிடம் 5 பவுன் நகை திருட்டு குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராமநாதபுரம்

பரமக்குடி,

பரமக்குடி கருணாநிதிபுரம் பகுதியை சேர்ந்தவர் நாகம்மாள் (வயது60). இவரது மகள் பாண்டியம்மாள் நயினார் கோவிலில் உள்ளார். அவரது வீட்டிற்கு சென்று விட்டு மீண்டும் பரமக்குடி வருவதற்காக நயினார் கோவிலில் பஸ்சுக்காக நின்று இருந்தார். அப்போது அருகில் இருந்த பெண் ஒருவர் உங்களது கழுத்தில் உள்ள செயினில் கொக்கி அறுந்து விழுவதுபோல் உள்ளது அதை கழற்றி நீங்கள் வைத்திருக்கும் பையில் வைத்துக்கொள்ளுங்கள் என கூறியுள்ளார். உடனே நாகம்மாளும் கழுத்தில் அணிந்து இருந்த 5 பவுன் தங்கச் செயினை கழற்றி பையில் வைத்துள்ளார்.

பரமக்குடி ஆற்றுப்பாலம் பஸ் ஸ்டாப்பில் வந்து பார்த்தபோது பையில் வைத்திருந்த நகையை காணவில்லை. இது குறித்து அவர் பரமக்குடி நகர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அந்த புகாரின் அடிப்படையில் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story