கோவில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளை


கோவில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளை
x

காங்கயம் அருகே கோவில் பூட்டை உடைத்து உண்டியலில் இருந்த பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். மேலும் 3 கோவில்களில் மர்ம ஆசாமிகள் கைவரிசை காட்ட முயற்சி செய்துள்ளனர்.

திருப்பூர்

காங்கயம் அருகே கோவில் பூட்டை உடைத்து உண்டியலில் இருந்த பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். மேலும் 3 கோவில்களில் மர்ம ஆசாமிகள் கைவரிசை காட்ட முயற்சி செய்துள்ளனர்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

நாகாத்தாள் அம்மன் கோவில்

காங்கயம் அருகே வட்டமலை பகுதியில் நாகாத்தாள் அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலை சுற்றி இரும்பு கம்பியால் வலை போன்று அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் கோவிலுக்கு கதவு ஏதும் இல்லை. கோவில் எப்போதும் திறந்து இருக்கும். இதனால் பக்தர்கள் எந்த நேரம் வேண்டும் என்றாலும் சென்று அம்மனை தரிசனம் செய்து வந்தனர். கோவிலுக்கு அம்மனை தரிசிக்க வரும்பக்தர்கள் தங்களது காணிக்கையை செலுத்தும் விதமாக சிலை அருகில் உண்டியல் ஒன்று வைக்கப்பட்டுள்ளது. செவ்வாய்க்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும்.

இந்த கோவிலில் ேநற்று காலை பக்தர்கள் வழக்கம் போல் நாகாத்தாள் அம்மனை தரிசிக்க சென்றனர். அப்போது சிலை அருகே உள்ள உண்டியல் திறந்து கிடந்தது. அதில் இருந்த காணிக்கை பணத்தை காணவில்லை. இது குறித்து காங்கயம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே போலீசார் சம்பவ இடம் வந்து பார்வையிட்டு விசாரணை செய்தனர். நேற்று முன்தினம் இரவு கோவிலுக்கு வந்த மர்ம ஆசாமிகள் உண்டியலை உடைத்து அதில் இருந்த பணத்தை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. உண்டியலில் ரூ.2 ஆயிரம் இருந்து இருக்கலாம் என்று பக்தர்கள் தெரிவித்தனர்.

மேலும் 3 கோவில்கள்

இதே போல் அந்த பகுதியில் உள்ள கருப்பண்ண சாமி கோவில் ஷட்டரை உடைத்து உள்ளே சென்ற ஆசாமிகள் அங்கிருந்த பூஜை பொருட்களை எடுத்து செல்லாமல் அப்படியே விட்டுவிட்டு சென்றுள்ளனர். முத்துக்குமாரசாமி கோவில், கன்னிமார் சாமி கோவில் காம்பவுண்டு சுற்றுச்சுவர் ஏறிக்குறித்து உள்ளே சென்ற ஆசாமிகள் சாமி சிலைகள் இருக்கும் கருவறை கதவு பூட்டை உடைக்க முடியாததால் திரும்பி சென்று உள்ளனர்.

இது குறித்து காங்கயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பகுதியில் ெபாருத்தப்பட்டுள்ள கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.


Related Tags :
Next Story