2 கோவில்களில் நகைகள், பணம் திருட்டு
தேன்கனிக்கோட்டையில் 2 கோவில்களில் நகைகள், பணம் திருட்டு போனது.
தேன்கனிக்கோட்டை
தேன்கனிக்கோட்டையில் காசி விஸ்வநாதர் கோவில் வளாகத்தில் பார்வதி மற்றும் அய்யப்பன் கோவில்கள் உள்ளன. நேற்று முன்தினம் பூசாரிகள் பூஜைகள் முடிந்து கோவில் நடைகளை சாத்தி விட்டு வீடுகளுக்கு சென்று விட்டனர். நேற்று காலை கோவிலுக்கு வந்த பூசாரிகள் வந்தனர். அப்போது பூட்டு உடைக்கப்பட்டு அங்கிருந்த உண்டியலில் இருந்த நகை மற்றும் பணம் ஆகியவை திருட்டு போனது கண்டு அவர்கள் அதிர்ச்சியடைந்தனர். இது தொடர்பாக தேன்கனிக்கோட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். அப்போது நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் கோவிலுக்குள் புகுந்து உண்டியலை உடைத்து அதில் இருந்த தங்க நகை, வெள்ளி பொருட்கள், பணத்தை திருடி சென்றது தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.