வீட்டின் கதவை உடைத்து 3 பவுன் திருட்டு
வீட்டின் கதவை உடைத்து 3 பவுன் நகை திருடப்பட்டது
சிவகங்கை
திருப்பத்தூர்ர்
திருப்பத்தூர் அருகே சவுமியநாராயணபுரம் பகுதியை சேர்ந்தவர் ஆனந்தன் மனைவி கற்பகவள்ளி (வயது 29). இவர் தனது மாமியார் மற்றும் தனது இரு குழந்தைகளுடன் வசித்து வருகிறார். சம்பவத்தன்று வீட்டை பூட்டி விட்டு கண்டரமாணிக்கம் கோவில் திருவிழாவை காண குடும்பத்துடன் சென்றார். மறுநாள் காலையில் வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்தை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் பீரோவில் இருந்த 3 பவுன் தங்க நகைகள் திருடு போனது தெரியவந்தது. இதுகுறித்து திருக்கோஷ்டியூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜய் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இதேபோல் கடந்த சில தினங்களுக்கு முன்பு திருப்பத்தூர் நகர் பகுதியில் வார்டு கவுன்சிலர் ஒருவரது வீட்டில் 15 பவுன் தங்க நகைகள் திருடு போனது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story