எருமப்பட்டி அருகே அம்மன் கோவிலில் திருட்டு
நாமக்கல்
எருமப்பட்டி
எருமப்பட்டி அருகே அலங்காநத்தம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற மகா மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் அம்மனுக்கு 2 பவுன் தங்க காசும், உற்சவருக்கு தங்க நாணையமும் அணிவிக்கப்பட்டு இருந்தது. இந்தநிலையில் நேற்று அந்த பகுதியை சேர்ந்த பக்தர்கள் மகா மாரியம்மன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்தனர். அப்போது சாமிக்கு அணிவிக்கப்பட்டு இருந்த தங்க காசும், தங்க நாணயமும் மர்மநபர்கள் திருடி சென்றதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து அவர்கள் எருமப்பட்டி போலீசில் புகார் அளித்தனர். இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story