அடுத்தடுத்து 3 கடைகளில் திருட்டு
உளுந்தூர்பேட்டை அருகே அடுத்தடுத்து 3 கடைகளில் திருட்டு மர்ம நபர்கள் கைவரிசை
கள்ளக்குறிச்சி
உளுந்தூர்பேட்டை
உளுந்தூர்பேட்டை போலீஸ் நிலையம் எதிரே உள்ள முருகன் கோவில் வீதியில் உள்ள போட்டோ ஸ்டுடியோ ஒன்றில் நேற்று முன்தினம் அதிகாலை மர்ம நபர்கள் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து ரூ.2 ஆயிரத்தை திருடிச் சென்றனர்.
இதே போல் அருகில் இருந்த மளிகை கடையில் புகுந்து ரூ.12,000, அழகு சாதன நிலையத்தில் ஆயிரம் ரூபாய் என அடுத்தடுத்து 3 கடைகளில் உள்ளே புகுந்து ரூ.15 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடி சென்று விட்டனர். மேலும் 2 கடைகளின் பூட்டை உடைத்து திருட முயன்றுள்ளனர். இது குறித்து தகவல் அறிந்து வந்த உளுந்தூர்பேட்டை போலீசார் திருட்டு நடந்த கடைகளை பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story