செல்போன் கடையில் திருட்டு


செல்போன் கடையில் திருட்டு
x

சாணார்பட்டி அருகே செல்போன் கடையில் திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

திண்டுக்கல்

சாணார்பட்டி அருகே உள்ள காவேரிசெட்டிபட்டியை சேர்ந்தவர் சதீஷ் (வயது 27). இவர், சாணார்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி அருகே செல்போன் கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு கடையை பூட்டி விட்டு அவர் வீட்டுக்கு சென்று விட்டார். நேற்று காலை அவர் கடையை திறக்க வந்தபோது, கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது கல்லாவில் இருந்த ரூ.2 ஆயிரம் மற்றும் 12 செல்போன் பேட்டரிகள் திருடு போயிருந்தது. இதுகுறித்து சாணார்பட்டி போலீஸ் நிலையத்தில் சதீஷ் புகார் அளித்தார். அதன்பேரில் சாணார்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story