செல்போன் கடையில் திருட்டு
திண்டுக்கல்லில் செல்போன் கடையில் செல்போன், பணம் திருடுபோனது.
திண்டுக்கல்
திண்டுக்கல் அண்ணாமலையார் மில்ஸ் மேடு பகுதியை சேர்ந்தவர் அப்துல்ரகுமான். இவர் திண்டுக்கல் பஸ் நிலையம் அருகே செல்போன் கடை வைத்துள்ளார். இந்த நிலையில் நேற்று காலை வழக்கம் போல் செல்போன் கடையை திறக்க சென்றார். அப்போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
பின்னர் கடைக்குள் சென்று பார்த்த போது கடையில் இருந்த 4 செல்போன்கள், கல்லாப்பெட்டியில் இருந்த ரூ.7 ஆயிரத்தை காணவில்லை. நள்ளிரவில் மர்ம நபர் பூட்டை உடைத்து செல்போன், பணத்தை திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து திண்டுக்கல் வடக்கு போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story