பள்ளிவாசல், கால்நடை மருத்துவமனை ஊழியர் வீட்டில் திருட்டு
பள்ளிவாசல், கால்நடை மருத்துவமனை ஊழியர் வீட்டில் திருட்டு சம்பவம் நடந்தது.
பள்ளிவாசலில் திருட்டு
திருச்சி பொன்மலை மேலகல்கண்டார்கோட்டை கம்பி கேட் சந்தை அருகில் பள்ளிவாசல் ஒன்று உள்ளது. தொழுகை முடிந்த பின்னர் நேற்று முன்தினம் இரவு பள்ளிவாசலை ஊழியர்கள் பூட்டிவிட்டு சென்றுள்ளனர். இதைத்தொடர்ந்து நேற்று அதிகாலை 4.30 மணி அளவில் தொழுகை அழைப்பாளர் முகமது நயினார் என்பவர் பள்ளிவாசலுக்கு வந்துள்ளார்.
அவர் முன்பக்க கதவின் பூட்டை திறந்து உள்ளே சென்றபோது உள்ளே இருந்த கதவின் பூட்டுகள் உடைக்கப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து பள்ளிவாசலுக்குள் அலமாரி மற்றும் பீரோவின் பூட்டு உடைக்கப்பட்டு, ரூ.50 ஆயிரம் மதிப்பிலான ஒலிபெருக்கி ஆம்ப்ளிபயர் மற்றும் அலுவலகத்தில் இருந்த ரூ.25 ஆயிரம் திருட்டு போயிருந்தது ெதரியவந்தது.
கோவிலில் திருட்டு முயற்சி
இது குறித்து அவர் பொன்மலை போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர். மேலும் அது ரெயில்வேக்கு உட்பட்ட பகுதி என்பதால் ரெயில்வே போலீசாரும் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில், திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்கள் பள்ளிவாசலின் சுற்றுச்சுவர் மீது ஏறி உள்ளே குதித்து திருட்டில் ஈடுபட்டுள்ளது தெரியவந்தது.
இதேபோல் அந்த பள்ளிவாசல் அருகே உள்ள ஒரு விநாயகர் கோவிலிலும் மர்ம நபர்கள் பூட்டை உடைத்து திருட முயன்றுள்ளனர். ஆனால் அங்கிருந்த உண்டியலில் பணம் இல்லாததால் அவர்கள் திரும்பிச் சென்றுள்ளனர் என்பதும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
போலீசார் விசாரணை
இதையடுத்து சம்பவ இடத்திற்கு கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, பள்ளிவாசல் மற்றும் விநாயகர் கோவிலில் மர்ம நபர்களின் கைரேகைகள் பதிவாகியுள்ளதா? என்று ஆய்வு செய்தனர். ஆனால் அந்த இடங்களில் மர்ம நபர்களின் கைரேகைகள் பதிவாகவில்லை என்பது தெரியவந்தது. இச்சம்பவம் குறித்து பொன்மலை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
5½ பவுன் நகை...