கம்பம்: பிரதான சாலையில் உள்ள கடைகளில் பூட்டை உடைத்து திருட்டு - மர்மநபர் கைவரிசை


கம்பம்: பிரதான சாலையில் உள்ள கடைகளில் பூட்டை உடைத்து திருட்டு - மர்மநபர் கைவரிசை
x

கம்பத்தில் பிரதான சாலையில் அடுத்தடுத்த கடையில் பூட்டை உடைத்து திருடி சென்ற மர்மநபரை போலிசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

தேனி:

தேனி மாவட்டம், கம்பம் தாத்தப்பன் குளம் தெருவைச் சேர்ந்தவர் சையதுஅப்தாஹிர் (வயது 43). இவர் ஜவுளி கடை வைத்துள்ளார். நேற்று இரவு கடையை பூட்டி விட்டு சென்றவர், இன்று காலை வழக்கம் போல் கடையை திறக்க வந்துள்ளார். அப்போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்துள்ளது.

இதனால் அதிர்ச்சியடைந்தவர் கடைக்குள் உள்ளே சென்று கல்லாவை பார்த்துள்ளார். அப்போது கல்லா திறந்தநிலையில் இருந்துள்ளது. மேலும் கல்லாவில் வைத்திருந்த ரூ 3 ஆயிரம் பணம் மற்றும் ரூபாய் 20 ஆயிரம் மதிப்புள்ள ஆடைகளை திருடி சென்றது தெரியவந்தது.

இதேபோல் அருகில் உள்ள மெத்தைக்கடை மற்றும் ரெடிமேட் கடை,செல்போன் கடையின் பூட்டை உடைத்து திருடு முயற்சி செய்தது தெரியவந்தது. இது சம்பந்தமாக சையது அப்தாஹிர் கம்பம் வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

அதன்பேரில் போலிசார் சம்பவ இடத்திற்கு சென்று தடயங்களை சேகரித்தனர். மேலும் கடையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்கள் பதிவான காட்சிகளை ஆய்வு மேற்க்கொண்டனர். பின்னர் மோப்பநாய் பைரவ் கம்பம்மெட்டு சாலை பிரிவு வரை ஓடி நின்றது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.

இது குறித்து போலீசார் கூறுகையில் திருட்டு நடைபெற்ற கடையில் கண்காணிப்பு கேமரா பொறுத்தியுள்ளனர். அதில் வாலிபர் ஒருவர் திருடி செல்லும் காட்சி பதிவாகியுள்ளது. அதன் அடிப்படையில் திருடனை தேடி வருவதாக தெரிவித்தனர். கம்பம் பிரதான சாலையில் அடுத்தடுத்து கடைகளில் திருடு நடைபெற்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடதக்கது.


Next Story