செல்போன் கடையில் நூதன முறையில் திருட்டு


செல்போன் கடையில் நூதன முறையில் திருட்டு
x
தினத்தந்தி 8 Jun 2023 12:15 AM IST (Updated: 8 Jun 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

விக்கிரவாண்டி செல்போன் கடையில் நூதன முறையில் திருட்டு மர்ம நபருக்கு போலீஸ் வலைவீச்சு

விழுப்புரம்

விக்கிரவாண்டி

விக்கிரவாண்டி பஸ் நிலையத்தில் ஷேக் முகமது(வயது 45) என்பவர் செல்போன் கடை நடத்தி வருகிறார். இவர் நேற்று முன்தினம் மதியம் சாப்பிட வெளியே சென்று இருந்த நிலையில் கடையில் வேலை செய்யும் சிறுவர்கள் 2 பேர் மட்டும் இருந்தனர். அப்போது அங்கு வந்த 30 வயது மதிக்கத்தக்க மர்ம நபர் செல்போன் சார்ஜர் வாங்குவதாக கூறி கடையில் இருந்த சிறுவர்களின் கவனத்தை திசை திருப்பி கடையில் சார்ஜர் போட்டு வைத்திருந்த செல்போனை திருடி சென்று விட்டார். வெளியே சென்றுவிட்டு கடைக்கு திரும்பிய ஷேக்முகமது சார்ஜரில் போட்டிருந்த தனது செல்போனை காணாமல் அதிர்ச்சி அடைந்தார். பின்னர் மீண்டும் கடைக்கு வந்தார். அப்போது ஷேக் முகமது செல்போன் இல்லாதது கண்டு அதிர்ந்து கண்காணிப்பு கேமராவை பார்த்தபோது மர்ம ஆசாமி திருடி சென்றது தெரியவந்தது. இது பற்றி தகவல் அறிந்த சப் இன்ஸ்பெக்டர் காத்தமுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை செய்து வருகிறார்.


Next Story