கடை-2 கோவில்களில் திருட்டு
கடை-2 கோவில்களில் திருட்டு நடந்துள்ளது.
3 இடங்களில் திருட்டு
அரியலூர் நகரில் வசித்து வருபவர் முருகானந்தம் (வயது 50). இவர் சிங்காரத்தெருவில் பெட்டிக்கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு இவரது கடையின் பூட்டை உடைத்த மர்மநபர்கள், கடையில் இருந்த ரூ.2 ஆயிரம் மற்றும் 20 சிகரெட் பாக்கெட்டுகளை திருடிச்சென்றனர்.
இது பற்றி தகவல் அறிந்த முருகானந்தம், அரியலூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதேபோல் புதுமார்க்கெட் பகுதியில் உள்ள செல்வ விநாயகர் கோவில் மற்றும் கீழத்தெருவில் உள்ள ஐந்தொழில் விநாயகர் கோவில் ஆகியவற்றின் பூட்டுகளும் உடைக்கப்பட்டு, அங்கிருந்த உண்டியல்கள் திருடப்பட்டிருந்தன.
கண்காணிப்பு கேமரா காட்சிகள்
நேற்று காலை கோவில்களில் உண்டியல் திருடப்பட்டிருப்பதை கண்ட அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சியடைந்து, அரியலூர் போலீசாருக்கு தகவல் அளித்தனர். இந்த சம்பவங்கள் குறித்து அரியலூர் போலீசார் தனித்தனியே வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
மேலும் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது அதில் 3 சிறுவர்கள் டவுசர் மற்றும் சட்டை அணிந்து கொண்டு தெருவை நோட்டமிடுவதும், அவர்களில் ஒரு சிறுவன் மட்டும் கோவிலுக்குள் சென்று உண்டியலை தூக்கி வருவதும் பதிவாகியிருந்தது. எனவே இந்த திருட்டு சம்பவங்களில் அந்த சிறுவர்கள் தான் ஈடுபட்டனரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.