மாணவியர் விடுதியில் திருட்டு
விழுப்புரம் அரசு சட்டக் கல்லூரி மாணவியர் விடுதியில் திருட்டு போலீசார் தீவிர விசாரணை
விழுப்புரம்
விழுப்புரம்
விழுப்புரம் அருகே உள்ள பெரும்பாக்கம் கிராமத்தில் அரசு சட்டக் கல்லூரி மாணவியர் விடுதி உள்ளது. கொரோனா தொற்று பரவியபோது இந்த விடுதி, கொரோனா சிகிச்சை மையமாக செயல்பட்டு வந்தது. அதன் பின்னர் இந்த விடுதி திறக்கப்படாமல் மூடியே கிடந்தது. இந்த நிலையில் நேற்று விடுதியின் முன்பக்க கதவில் போடப்பட்ட பூட்டு உடைக்கப்பட்டு கதவுகள் திறந்து கிடந்ததை அந்த வழியாக சென்றபொதுமக்கள் பார்த்து போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் காணை போலீசார் விரைந்து சென்று விடுதியை பார்வையிட்டனர். அப்போது யாரோ மர்ம நபர்கள் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து விடுதியில் இருந்த சமையல் பாத்திரங்கள், நாற்காலிகள், மேஜைகள் உள்ளிட்ட பொருட்களை திருடி சென்றது தெரியவந்தது. இதன் மதிப்பு பல லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story