பெண்ணாடத்தில் வீற்றிருந்த பெருமாள் கோவில் பூட்டை உடைத்து உண்டியல் பணம் திருட்டு கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றி போலீஸ் விசாரணை


பெண்ணாடத்தில்  வீற்றிருந்த பெருமாள் கோவில் பூட்டை உடைத்து உண்டியல் பணம் திருட்டு  கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றி போலீஸ் விசாரணை
x

பெண்ணாடத்தில் வீற்றிருந்த பெருமாள் கோவில் பூட்டை உடைத்து உண்டியல் பணம் திருட்டு போனது. அங்கிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடலூர்


பெண்ணாடம்,

பெண்ணாடம் மேற்கு ரதவீதியில் வீற்றிருந்த பொருமாள் கோவில் அமைந்துள்ளது. நேற்று முன்தினம் வழக்கம் போல் கோவிலில் பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து பட்டாச்சாரியார் பாலாஜி இரவு 9 மணிக்கு கோவில் நடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றார்.

நேற்று காலை 7 மணிக்கு கோவில் நடையை திறந்து கோவிலிக்குள் வந்தார். அப்போது கோவிலின் மகா மண்டபத்தின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த பட்டாச்சாரியார் பாலாஜி இது குறித்து கோவில் உபயோதாரர்களான மோகனசுந்தரம், இளங்கோவன் ஆகியோருக்கு தகவல் தெரிவித்தார்.

உண்டியல் பணம் திருட்டு

அதன்பேரில், கோவிலுக்கு வந்த வந்த உபயதாரர்கள் பெண்ணாடம் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் தீபன் தலைமையிலான போலீசார் நேரில் வந்து சம்பவ இடத்தை பார்வையிட்டனர். கோவில் சுற்றுச்சுவர் வழியாக ஏறி குதித்த மர்ம நபர்கள், உள்மண்டபத்திற்குள் புகுந்து அங்கிருந்த எச்சரிக்கை மணியின் இணைப்பை துண்டித்துவிட்டு, கோவில் உண்டியலின் பூட்டை உடைத்து அதில் இருந்த பணத்தை திருடி சென்று இருந்தது தெரியவந்தது. கோவில் உண்டியலில் 20 ஆ யிரம் ரூபாய் பணம் இருந்து இருக்கும் என்று கோவில் தரப்பில் தெரிவித்தனர்.

கண்காணிப்பு கேமரா பதிவு

இது தெடர்பாக பெண்ணாடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கோவில் வளாகத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளின் அடிப்படையில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story