பெண்ணாடம் அருகே கோவில் பூட்டை உடைத்து அம்மன் கழுத்தில் இருந்த தாலி சங்கிலி திருட்டு


பெண்ணாடம் அருகே கோவில் பூட்டை உடைத்து  அம்மன் கழுத்தில் இருந்த தாலி சங்கிலி திருட்டு
x

பெண்ணாடம் அருகே கோவில் பூட்டை உடைத்து அம்மன் கழுத்தில் இருந்த தாலி சங்கிலியை மா்மநபா்கள் திருடி சென்று விட்டனா்.

கடலூர்


பெண்ணாடம்,

பெண்ணாடம் அடுத்த பாசிக்குளம் கிராமத்தில் முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. நேற்று காலை இந்த கோவில் கதவு பூட்டு உடைக்கப்பட்டு, திறந்து கிடந்தது. இதையடுத்து அந்த பகுதி மக்கள் உள்ளே சென்று பார்த்தனர். அப்போது, அம்மன் கழுத்தில் அணிந்திருந்த 1¾ பவுன் தாலி சங்கிலி மற்றும் சில்வர் குடத்திலான உண்டியல் ஆகியன திருடு போயிருந்தது.

இதுகுறித்த புகாரின் பேரில் கருவேப்பிலங்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து, கோவிலில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர். மேலும் இதே கிராமத்தில் கடந்த மாதம் 21-ந்தேதி பஸ் நிறுத்தத்தின் அருகே உள்ள கிருஷ்ணர் கோவிலில் பாமா ருக்மணி சாமி கழுத்தில் அணிந்திருந்த 2 சவரன் தாலி மற்றும் சில்வர் உண்டியலை மர்ம நபர்கள் திருடிச்சென்று இருந்தனர். அடுத்தடுத்து நடந்த திருட்டு சம்பவத்தால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.


Next Story