வேப்பூர் அருகே கோவில் மணிகளை திருடிய 2 பேர் கைது


வேப்பூர் அருகே  கோவில் மணிகளை திருடிய 2 பேர் கைது
x

வேப்பூர் அருகே கோவில் மணிகளை திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

கடலூர்


ராமநத்தம்,

வேப்பூர் அருகே உள்ள மாளிகைமேடு கிராமத்தில் ஏரிக்கரை அருகே அய்யனார் கோவில் உள்ளது. இந்த கோவிலில் இருந்த 65 கிலோ எடையுள்ள ஒரு மணி, 6 கிலோ எடையுள்ள 6 மணிகள் என்று மொத்தம் 7 மணிகளை மர்ம நபர்கள் திருடி சென்றுவிட்டனர். இதுபற்றி கோவில் தர்மகர்த்தா கிருஷ்ணசாமி என்பவர் அளித்த புகாரின் பேரில் வேப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

திருட்டு நடந்த கோவிலில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை போலீசார் பார்வையிட்டனர். அதில் மொத்தம் இருந்த 16 கேமராக்களில் 15 கேமராக்கள் மீது மாட்டு சாணம் மற்றும் சேற்றை பூசி மறைத்து இருந்தது.

ஆனால் ஒரு கேமராவை மர்ம நபர்கள் னிக்க தவறியதன் காரணமாக, அதன் மூலம் பதிவான காட்சிகளின் அடிப்படையில் விசாரணையை தொடங்கினர். அதில் 4 பேர் கோவில் மணிகளை திருடி செல்வது தெரியவந்தது.

2 பேர் கைது

இதையடுத்து, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் உத்தரவின் பேரில் திட்டக்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு காவியா மேற்பார்வையில் வேப்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் தலைமையில், சிறுபாக்கம் சப்-இன்ஸ்பெக்டர் ஜம்புலிங்கம், போலீஸ்காரர்கள் கலைசெல்வன், நாராயணசாமி ஆகியோர் கொண்ட தனிப்படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். கண்காணிப்பு கேமரா காட்சிகளின் அடிப்படையில மேற்கொண்ட விசாரணையில், கோவில் மணிகளை திருடியது அரியலூர் மாவட்டம் முதுக்குளம் கிராமத்தை சேர்ந்த இளையபெருமாள் மகன் வெங்கடேசன் (வயது 41), அரியலூர் மாவட்டம் பெரியாக்குறிச்சியை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் சங்கர் (47) என்பது தெரியவந்தது. இவர்கள் இருவரையும் தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய வடிவேல், கார்த்தி ஆகியோரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story