பூட்டிய வீட்டில் 17 பவுன் நகை-வெள்ளி பொருட்கள் திருட்டு
அருப்புக்கோட்டை அருகே பூட்டிய வீட்டு்க்குள் புகுந்து 17 பவுன் நகைகள், 1 கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டன. இது தொடர்பாக மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
அருப்புக்கோட்டை,
அருப்புக்கோட்டை அருகே பூட்டிய வீட்டு்க்குள் புகுந்து 17 பவுன் நகைகள், 1 கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டன. இது தொடர்பாக மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
நகை, வெள்ளி பொருட்கள் கொள்ளை
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை கணேஷ்நகர் பகுதியை சேர்ந்தவர் செந்தில்வேல்(வயது 60). இவர் ஒரு தனியார் மில்லில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
இவரது மனைவி ஞானசக்திகுமாரி. இந்த நிலையில் செந்தில்வேல் தனது மனைவியின் மருத்துவ சிகிச்சைக்காக வீட்டை பூட்டி விட்டு கடந்த 14-ந்தேதி விருதுநகரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்றார். இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீட்டில் ஆள் இல்லாததை அறிந்து கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் அலமாரியில் பையில் வைத்திருந்த 17 பவுன் நகைகள், 1 கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் ரூ.35 ஆயிரம் கொள்ளையடித்து விட்டு தலைமறைவாகி விட்டனர்.
போலீசில் புகார்
பின்னர் நேற்று முன்தினம் வீட்டிற்கு திரும்பிய செந்தில்வேல் கதவு உடைக்கப்பட்டு, அலமாரியில் இருந்த நகை, வெள்ளி பொருட்கள், பணம் திருட்டு போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
போலீசார் விரைந்து வந்து சம்பவ இடத்தில் ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் உதவியுடன் தடயங்கள் சேகரிக்கப்பட்டது. இதுகுறித்து வழக்குபதிவு செய்து தப்பி ஓடிய மர்ம நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.