2 மின் மோட்டார்கள் திருட்டு


2 மின் மோட்டார்கள் திருட்டு
x

2 மின் மோட்டார்கள் திருட்டுபோனது.

அரியலூர்

கடலூர் மாவட்டம், காட்டுமன்னார் கோவில் அருகே உள்ள லால்பேட்டை மெயின் ரோடு தெருவை சேர்ந்தவர் முத்து(வயது 42). இவர் அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே உள்ள பாப்பாக்குடி கிராமத்தில் உள்ள மின் அலுவலகம் எதிரே உள்ள இடத்தில் மீன் கடை வைத்து நடத்தி வருகின்றார். மேலும் கடையின் அருகே உள்ள ஒரு கொட்டகையில் 2 மின் மோட்டார்கள் மற்றும் உபயோகமற்ற பொருட்களை வைத்து இருந்தார். இந்த நிலையில் சம்பவத்தன்று இந்த கொட்டகையில் இருந்த 2 மின்மோட்டார்களை மர்ம நபர்கள் திருடி சென்றனர். இதுகுறித்து முத்து மீன்சுருட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story