2 மோட்டார் சைக்கிள்கள் திருட்டு


2 மோட்டார் சைக்கிள்கள் திருட்டு
x

2 மோட்டார் சைக்கிள்கள் திருட்டு போனது.

திருச்சி

திருச்சி சுப்பிரமணியபுரத்தை சேர்ந்தவர் காமராஜ் (வயது 49). இவர் சம்பவத்தன்று புத்தூர் நான்குரோட்டில் உள்ள வங்கி முன்பு தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு வங்கிக்கு சென்றார். சிறிதுநேரம் கழித்து வந்து பார்த்தபோது, மோட்டார் சைக்கிள் திருட்டு போய் இருந்தது. இதேபோல் உறையூர் சாலைரோடு தேவாங்க நெசவாளர் காலனியை சேர்ந்தவர் சுஜிதா(32). இவர் வீட்டின் முன்பு தனது இருசக்கர வாகனத்தை நிறுத்தியிருந்தார். ஆனால் சிறிது நேரத்தில் அந்த வாகனம் திருட்டு போயிருந்தது. இது குறித்து இருவரும் தனித்தனியாக அளித்த புகாரின்பேரில் உறையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story