3 மடிக்கணினிகள், செல்போன் திருட்டு
ராமநாதபுரத்தில் மருத்துவக்கல்லூரி மாணவர் விடுதிக்குள் புகுந்து 3 மடிக்கணினிகள், செல்போன் திருடிய ஆசாமியை போலீசார் கைது செய்தனர்.
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருபவர் அர்ஜுன் அமீல் (வயது 19). இவர் மாணவர் விடுதியில் தங்கி படித்து வந்தார்.
நேற்று முன்தினம் இவர் தனது நண்பர்களுடன் மடிக்கணினியில் கல்வி தொடர்பாக வேலைகளை பார்த்து விட்டு நடை பயிற்சிக்கு சென்றுவிட்டார்.
திரும்பி வந்து பார்த்தபோது அவரது மடிக்கணினி மற்றும் நண்பர்களின் விலை உயர்ந்த மடிக்கணினி, செல்போன் உள்ளிட்டவைகள் திருடு போயிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். மொத்தம் 3 மடிக்கணினிகள் மற்றும் ஒரு செல்போன் திருடு போயிருந்தது. இது குறித்து அர்ஜுன் அமீல் அளித்த புகாரின் அடிப்படையில் ராமநாதபுரம் கேணிக்கரை போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை செய்தனர் மருத்துவக் கல்லூரி விடுதியில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது மர்ம நபர் ஒருவர் விடுதிக்குள் புகுந்து திருடி சென்றது தெரியவந்தது.
இந்த காட்சி ஆதாரங்களின் அடிப்படையில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.