தொழிலாளி வீட்டில் 30 பவுன் நகை திருட்டு
தொழிலாளி வீட்டில் 30 பவுன் நகை திருடப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவகங்கை
திருப்புவனம்,
திருப்புவனம் போலீஸ் சரகத்தை சேர்ந்த சிலைமான் ரெயில்வே காலனி அருகே வசித்து வருபவர் சந்திரசேகர்(வயது 37). இவர் சென்ட்ரிங் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி உதயா. இவர் பசியாபுரம் கிராமத்தில் காலை சத்துணவு திட்டத்தில் வேலை பார்த்து வருகிறார்.
சம்பவத்தன்று கணவன், மனைவி இருவரும் வேலைக்கு சென்று விட்டனர். வீட்டில் யாரும் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீட்டின் பின்புறம் இருந்த ஜன்னலை உடைத்து உள்ளே புகுந்து பீரோவை உடைத்து உள்ளே இருந்த 30 பவுன் நகைகளை திருடி சென்றுவிட்டனர். இது குறித்து உதயா கொடுத்த புகாரின் பேரில் திருப்புவனம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story