ஓடும் பஸ்சில் மூதாட்டியிடம் 4½ பவுன் நகை திருட்டு


ஓடும் பஸ்சில் மூதாட்டியிடம் 4½ பவுன் நகை திருட்டு
x
தினத்தந்தி 23 Jan 2023 1:00 AM IST (Updated: 23 Jan 2023 1:00 AM IST)
t-max-icont-min-icon

ஓடும் பஸ்சில் மூதாட்டியிடம் 4½ பவுன் நகை திருட்டு போனது.

சேலம்

கன்னங்குறிச்சி:-

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தம்மாள் (வயது 70). இவர், சின்னத்திருப்பதி எம்.ஜி.ஆர். நகரில் தன்னுடைய அண்ணன் வெங்கட்ராமன் வீட்டிற்கு வந்தார். சேலத்தில் இருந்து டவுன் பஸ்சில் ஏறி சின்னத்திருப்பதியில் இறங்கினார். அப்போது தான் கழுத்தில் அணிந்து இருந்த 4½ பவுன் நகையை காணவில்லை. ஓடும் பஸ்சில் கோவிந்தம்மாளிடம் யாரோ மர்மநபர், நகையை திருடியது தெரிய வந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் கன்னங்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.


Next Story