பாத்திரத்தில் மறைத்து வைத்து இருந்த 5 பவுன் நகை-வெள்ளி பொருட்கள் திருட்டு


பாத்திரத்தில் மறைத்து வைத்து இருந்த 5 பவுன் நகை-வெள்ளி பொருட்கள் திருட்டு
x

பாத்திரத்தில் மறைத்து வைத்து இருந்த 5 பவுன் நகை-வெள்ளி பொருட்கள் திருடப்பட்டது.

திருச்சி

திருச்சி கே.கே.நகர் எஸ்.எம்.எஸ். காலனி 3-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (வயது 43) தொழிலாளி. இவர் திருடர்களுக்கு பயந்து ஒரு சில்வர் பாத்திரத்தில் 5 பவுன் தங்க நகை, 173 கிராம் வெள்ளி பூஜை பொருட்களை பாதுகாப்பாக மறைத்து வைத்து இருந்தார். இந்த நிலையில் மர்ம ஆசாமிகள் வீடு புகுந்து சில்வர் பாத்திரத்தில் வைத்திருந்த 5 பவுன் தங்க நகை மற்றும் வெள்ளி பொருட்கள், ரூ.4 ஆயிரத்தை திருடி சென்றுவிட்டனர். இது குறித்த புகாரின் பேரில் கே.கே.நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயா வழக்குப்பதிவு செய்து திருட்டு ஆசாமிகளை தேடி வருகிறார்.


Next Story