6½ பவுன் நகை திருட்டு
6½ பவுன் நகை திருட்டு போனது
சிவகங்கை
காரைக்குடி
குன்றக்குடி போலீஸ் சரகம் கோவிலூரை சேர்ந்தவர் சரண்யா(வயது 28). இவர் சம்பவத்தன்று தனது குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் குழந்தையை அழைத்துக் கொண்டு வீட்டை பூட்டி விட்டு காரைக்குடியில் உள்ள ஆஸ்பத்திரிக்கு சென்று விட்டார். ஆஸ்பத்திரியில் இருந்தபோது சரண்யாவை போன் மூலம் தொடர்பு கொண்ட உறவினர் வீட்டின் கதவு திறந்து கிடக்கிறது என்று தெரிவித்தார். அதனை தொடர்ந்து சரண்யா வீட்டுக்கு விரைந்து சென்று பார்த்த போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. மேலும் வீட்டில் பீரோவில் வைத்திருந்த 6½ பவுன் நகைகளை காணவில்லை. மர்ம நபர் திருடி சென்றது தெரியவந்தது. இது குறித்த புகாரின் பேரில் குன்றக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story