வீட்டின் பூட்டை உடைத்து 8¾ பவுன் நகை-ரூ.2½ லட்சம் திருட்டு
வீட்டின் பூட்டை உடைத்து 8¾ பவுன் நகை-ரூ.2½ லட்சம் திருட்டுபோனது.
திருச்சி
துவரங்குறிச்சி:
திருச்சி மாவட்டம், வளநாடு அருகே உள்ள கோவில்பட்டியை அடுத்த மேடுகாட்டுப்பட்டியை சேர்ந்தவர் முருகேசன். தையல் தொழிலாளி. இவரது மனைவி தேவி(வயது 37). முருகேசன் நேற்று வழக்கம்போல் கடைக்கு சென்று விட்டார். தேவி வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு சென்று விட்டார்.
பின்னர் மாலையில் அவர்கள் வீட்டிற்கு வந்து பார்த்தபோது கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோ மற்றும் பெட்டியில் வைக்கப்பட்டிருந்த 8¾ பவுன் நகைகள் மற்றும் பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டிருந்த ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் திருட்டு போயிருந்தது தெரியவந்தது. இது குறித்து தகவல் அறிந்த வளநாடு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story