பூட்டிய வீட்டில் 9 பவுன் நகை திருட்டு
பனவடலிசத்திரத்தில் பூட்டிய வீட்டில் 9 பவுன் நகை திருட்டு போனது.
பனவடலிசத்திரம்:
பனவடலிசத்திரம் சொக்கலிங்கபுரம் ரோடு பகுதியை சேர்ந்தவர் முருகன் (வயது 50). இவரது மனைவி மாரித்தாய் (45). இவர்கள் 2 பேரும் கேரளாவில் கூலி வேலை செய்து வருகிறார்கள். இதனால் அந்த வீட்டை மாரித்தாயின் தம்பி தங்கராஜ் என்பவர் பராமரித்து வருகிறார்.
இந்த நிலையில் நேற்று காலையில் தங்கராஜ் தனது அக்காவின் வீட்டை பார்ப்பதற்காக சென்றார்.
அப்போது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோவும் உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது.
இதுகுறித்து உடனடியாக மாரித்தாய்க்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் வந்து பார்த்தபோது பீரோவில் வைத்திருந்த 9 பவுன் நகைகள் திருட்டு போனது தெரியவந்தது.
இதுகுறித்து மாரித்தாய் பனவடலிசத்திரம் போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் திவ்யா வழக்குப்பதிவு செய்து, மர்ம நபர்களை வலைவீசி தேடிவருகிறார்.