கோவிலில் அம்மனின் தாலி, குத்துவிளக்குகள், உண்டியல் திருட்டு
கோவிலில் அம்மனின் தாலி, குத்துவிளக்குகள், உண்டியல் திருட்டுபோனது.
பெரம்பலூர்
பெரம்பலூர் புறநகர் திருச்சி-சென்னை புறவழிச்சாலையில் தனியார் பருத்தி ஆலை உள்ளது. இந்த ஆலைக்கு பின்புறம், எளம்பலூரில் இருந்து செங்குணம் கிராமத்திற்கு செல்லும் சாலையில் மகா வராகி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று முன்தினம் இரவு பூட்டை உடைத்து அம்மன் கழுத்தில் கிடந்த மஞ்சள் கயிற்றில் கோர்க்கப்பட்ட குண்டுமணியுடன் சேர்ந்த 1 பவுன் தாலி, 3 அடி உயர பித்தளை குத்து விளக்குகள் 2 மற்றும் பொருத்தப்படாத உண்டியலை திருடிச்சென்றுள்ளனர். இந்த திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story