2 கோவில்களில் உண்டியல் பணம் திருட்டு


2 கோவில்களில் உண்டியல் பணம் திருட்டு
x

2 கோவில்களில் உண்டியல் பணம் திருட்டுபோனது.

அரியலூர்

ஆண்டிமடம்:

அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் அருகே அணிக்குறிச்சான் கிராமத்தில் லட்சுமி நாராயண பெருமாள் கோவில் உள்ளது. சம்பவத்தன்று இரவு இந்த கோவிலின் உண்டியலில் இருந்த பணத்தை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர்.

மேலும் அந்த கோவிலில் இருந்து சற்று தொலைவில் உள்ள அய்யனார் கோவிலின் உண்டியலையும் உடைத்து பணத்தை திருடிச்சென்றுள்ளனர். இந்த கோவில்களின் உண்டியல்களில் மொத்தம் ரூ.5 ஆயிரம் வரை இருந்திருக்கும் பொதுமக்கள் கூறுகின்றனர்.

இது குறித்து தகவல் அறிந்த ஆண்டிமடம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். மேலும் அப்பகுதியில் இருந்து கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை பார்வையிட்டனர். அப்போது 2 மர்ம நபர்கள், இந்த கோவில்களில் உண்டியலை உடைத்து பணத்தை திருடிச்செல்லும் காட்சி பதிவாகியிருந்தது. இது குறித்து ஆண்டிமடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி, மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.


Next Story