கோவிலில் உண்டியல் பணம் திருட்டு


கோவிலில் உண்டியல் பணம் திருட்டு
x

கோவிலில் உண்டியல் பணம் திருட்டு போனது.

பெரம்பலூர்

பெரம்பலூர்-எளம்பலூர் சாலையில் உப்போடையில் நாகமுத்து மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் வருடாபிஷேகம் கடந்த மாதம் 26-ந்தேதி நடைபெற்றது. இதைத்தொடர்ந்து கடந்த 4-ந்தேதி எட்டாம் திருவிழா நடைபெற்றது. இந்த நிலையில் நேற்று காலை தர்மகர்த்தா புஷ்பநாதன் கோவிலை திறந்து பார்த்தபோது உண்டியலில் இருந்த சுமார் ரூ.9 ஆயிரம் திருட்டு போயிருந்தது. இது குறித்து புஷ்பநாதன் பெரம்பலூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story