கோவிலில் உண்டியல் பணம் திருட்டு
கருங்கல் அருகே கோவிலில் உண்டியல் பணம் திருட்டு
கன்னியாகுமரி
கருங்கல்,
கருங்கல் அருகே உள்ள பூட்டேற்றி கண்ணத்தான்குழியில் பத்ரேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இந்தகோவிலின் முன்பு பக்தர்கள் நேர்ச்சை காணிக்கை செலுத்தும் வகையில் உண்டியல் ஒன்று வைக்கப்பட்டுள்ளது. சம்பவத்தன்று கோவிலுக்கு வந்தவர்கள் உண்டியல் உடைக்கப்பட்டு அதில் இருந்த காணிக்கை பணம் திருடப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து கோவில் பொறுப்பாளர் ராஜகோபால் கருங்கல் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் அடிப்படையில் கோவிலில் உண்டியல் பணத்ைத திருடி சென்றவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
Related Tags :
Next Story