பள்ளியில் சமையல் பாத்திரங்கள்-பொருட்கள் திருட்டு
பள்ளியில் சமையல் பாத்திரங்கள்-பொருட்கள் திருட்டுபோயின.
பெரம்பலூர்
மங்களமேடு:
பெரம்பலூர் மாவட்டம், மங்களமேட்டை அடுத்துள்ள திருமாந்துறை கிராமத்தில் உள்ள டி.இ.எல்.சி. மானிய தொடக்கப் பள்ளியில் 35 மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்த பள்ளியில் சிவசங்கரி(வயது 39) என்பவர் கடந்த 3 ஆண்டுகளாக சத்துணவு அமைப்பாளராக பணிபுரிந்து வருகிறார். கடந்த 24-ந் தேதி அவர் சமையலறையை பூட்டிவிட்டு சென்றார். இதையடுத்து நேற்று காலை பணிக்கு வந்த சிவசங்கரி, சமையலறையின் பூட்டு உடைக்கப்பட்டு, சமையல் செய்யும் பாத்திரங்கள் மற்றும் பொருட்கள் திருட்டு போயிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து மங்களமேடு போலீசில் அளிக்கப்பட்ட புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையே மாற்று ஏற்பாடு செய்து சமையல் செய்யப்பட்டு, மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.
Related Tags :
Next Story