தாமிர கம்பிகள் திருட்டு
தாமிர கம்பிகளை திருடியது தொடர்பாக 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
வடலூர்,
வடலூர் அருகே பார்வதிபுரம் பகுதியில் மழைநீரால் பாதிக்கப்பட்ட பகுதிகளை கிராம நிர்வாக அலுவலர் பார்த்தசாரதி ஆய்வு மேற்கொண்டார். அப்போது பார்வதிபுரம் சுடுகாடு அருகில் என்.எல்.சி.யில் இருந்து தாமிர கம்பிகளை திருடிக்கொண்டு வந்து அதனை தீ வைத்து எரித்து கம்பிகளை பிரித்தெடுக்கும் பணியில் மர்மநபர்கள் ஈடுபட்டனர். இதைபார்த்த கிராம நிர்வாக அலுவலர் பார்த்தசாரதி, உடனே இது குறித்து வடலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து இன்ஸ்பெக்டர் வீரமணி, சப்-இன்ஸ்பெக்டர் சங்கர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது போலீசாரை பார்த்ததும், மர்மநபர்கள் தாமிர கம்பிகளை அங்கேயே போட்டுவிட்டு தப்பிச்சென்ற்னர். இதையடுத்து ரூ.80 ஆயிரம் மதிப்புள்ளள தாமிர கம்பிகளை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் தாமிர கம்பிகளை திருடியது தொடர்பாக பார்வதிபுரம் இந்திரா நகரை சேர்ந்த அந்தோணிராஜ், ஸ்டீபன் உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.