ரூ.1 லட்சம் மதிப்பிலான காப்பர் ஒயர்கள் திருட்டு


ரூ.1 லட்சம் மதிப்பிலான காப்பர் ஒயர்கள் திருட்டு
x

ரூ.1 லட்சம் மதிப்பிலான காப்பர் ஒயர்கள் திருட்டு போனது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

அரியலூர்

அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியம் குலமாணிக்கம் கிராமத்தில், அரோக்கியசாமி என்ற விவசாயி நேற்று காலை மோட்டார் இயக்குவதற்காக வயலுக்கு சென்றுள்ளார். அப்போது போர்வெல்லில் இருந்து மோட்டாருக்கு வரக்கூடிய ஒயர்கள் அறுந்து கிடந்துள்ளது. தகவல் அறிந்த அருகே இருந்த விவசாயிகளும் தங்களது மோட்டார்களை பார்த்தபோது போர்களில் இருந்து மோட்டாருக்கு வரக்கூடிய ஒயர்கள் அறுந்து கிடந்துள்ளது. மேலும் அப்பகுதியை சேர்ந்த பால்ராஜ், மரியம்மாள் மற்றும் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ஜான் பீட்டர் ஆகிய 4 பேருக்கு சொந்தமான, வயல்வெளிகளில் உள்ள மின் மோட்டார்களில் இருந்து, சுமார் ரூ.1 லட்சம் மதிப்பிலான காப்பர் ஒயர்கள் திருட்டப்பட்டிருந்தது. மேலும் சிலரது மோட்டார் செட்டுகளில் இருந்து காப்பர் வயரை எடுக்க முடியாததால் மோட்டார் அதற்கு போடப்பட்டிருந்த பெல்ட்டுகள் உள்ளிட்டவற்றை சேதப்படுத்திவிட்டு திருடர்கள் சென்றுள்ளனர். இப்படி திருடப்பட்ட காப்பர் வயர்களை திருடர்கள் அருகில் இருந்த ஓடையின் அருகே வைத்து கொளுத்தி அதிலிருந்து செம்பு கம்பிகளை மட்டும் பிரித்து எடுத்து தப்பித்து சென்றுள்ளனர். இச்சம்பவம் குறித்து வெங்கனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story