பசுமாடுகள் திருட்டு
பசுமாடுகள் திருட்டுபோனது
பேரையூர்
பேரையூர் தாலுகா பூசலப்புரத்தை சேர்ந்தவர் ஒச்சம்மாள் (வயது 50). இவர் பசு மாடுகள் வளர்த்து வருகிறார். சம்பவத்தன்று இரவு பசு மாடுகளுக்கு தீவனம் வைத்துவிட்டு தூங்க சென்றார். மறுநாள் காலையில் பார்த்தபோது கட்டி வைத்திருந்த 2 பசுமாடுகள் திருடு போயிருந்தது. மேலும் அதே ஊரை சேர்ந்த சிவகாமி, காசிமாயன் ஆகியோருடைய பசுமாடுகளும் திருடு போயிருந்தது. திருடு போன 4 மாடுகளின் மதிப்பு ரூ.ஒரு லட்சத்து 35 ஆயிரம் ஆகும். இது குறித்த புகாரின் பேரில் சேடப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து மாடுகளை திருடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire