பேக்கரி உரிமையாளர் வீட்டில் தங்கசங்கிலி-வெள்ளி பொருட்கள் திருட்டு


பேக்கரி உரிமையாளர் வீட்டில் தங்கசங்கிலி-வெள்ளி பொருட்கள் திருட்டு
x

பேக்கரி உரிமையாளர் வீட்டில் தங்கசங்கிலி-வெள்ளி பொருட்கள் திருட்டு நடந்துள்ளது.

கரூர்

சின்னதாராபுரம் அருகே உள்ள மலர்ச்சியூரை சேர்ந்தவர் சண்முகம் (வயது 40). இவர் சின்னதாராபுரத்தில் பேக்கரி வைத்து நடத்தி வருகிறார். இந்தநிலையில் நேற்று காலை வீட்டை பூட்டி விட்டு பேக்கரிக்கு சென்று விட்டார். மீண்டும் மதியம் சாப்பிடுவதற்காக வீட்டுக்கு வந்தார்.

அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. இதையடுத்து அவர் உள்ளே சென்று பார்த்தபோது, அங்கிருந்த 4 பீரோக்களும் உடைக்கப்பட்டு, அதில் இருந்த 3 பவுன் தங்கசங்கிலி, வெள்ளி கொலுசு, வெள்ளி சங்கிலி ஆகியவற்றை மர்மநபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்த சின்னதாராபுரம் போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். இந்த திருட்டு குறித்து சண்முகம் கொடுத்த புகாரின்பேரில், சின்னதாரபுரம் போலீசார் வழக்குப்பதிந்து மர்மநபர்களை தேடி வருகின்றனர்.


Next Story