வீட்டில் தங்க நாணயங்கள், வெள்ளி பொருட்கள் திருட்டு


வீட்டில் தங்க நாணயங்கள், வெள்ளி பொருட்கள் திருட்டு
x

வீட்டில் தங்க நாணயங்கள், வெள்ளி பொருட்கள் திருட்டுபோனது.

திருச்சி

திருச்சி சீனிவாசன் நகர் 1-வது கிராஸ் ஈடன் கார்டன் பகுதியை சேர்ந்தவர் முத்துக்குமார்(வயது 41). இவர் பொங்கல் பண்டிகையையொட்டி தனது சொந்த ஊரான தேவகோட்டைக்கு குடும்பத்துடன் சென்றுவிட்டு நேற்று முன்தினம் வீடு திரும்பினார். வீட்டுக்கு வந்து பார்த்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது 14 கிராம் தங்க நாணயங்கள், வெள்ளி குத்துவிளக்கு, வெள்ளி குங்குமச்சிமிழ், வெள்ளி கிண்ணம் மற்றும் வெள்ளி பொருட்கள் ஆகியவை திருட்டு போயிருந்தன. இதுகுறித்த புகாரின்பேரில் திருச்சி அரசு ஆஸ்பத்திரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story