வீட்டில் தங்க நகை-ரூ.5 ஆயிரம் திருட்டு


வீட்டில் தங்க நகை-ரூ.5 ஆயிரம் திருட்டு
x

வீட்டில் தங்க நகை-ரூ.5 ஆயிரம் திருட்டுபோனது.

திருச்சி

பொன்மலைப்பட்டி:

திருச்சி பொன்மலை தங்கேஸ்வரி நகர் கீழத்தெருவை சேர்ந்தவர் அக்பர். இவரது மனைவி நூருல் அமான்(வயது 25). அக்பர் கூலி வேலை செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு அக்பர் குடும்பத்துடன் வீட்டில் படுத்து தூங்கியுள்ளார். நேற்று காலை எழுந்து பார்த்தபோது வீட்டின் அலமாரியில் இருந்த 5 கிராம் தங்கத்தோடு மற்றும் ரூ.5 ஆயிரம் ஆகியவை திருட்டு போயிருந்தது தெரியவந்தது. இது குறித்து நூருல் அமான் பொன்மலை குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story