பல்பொருள் அங்காடியில் பொருட்கள் திருட்டு


பல்பொருள் அங்காடியில் பொருட்கள் திருட்டு
x
தினத்தந்தி 19 Jun 2023 1:00 AM IST (Updated: 19 Jun 2023 1:00 AM IST)
t-max-icont-min-icon

பல்பொருள் அங்காடியில் பொருட்கள் திருட்டு போனது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நீலகிரி

ஊடடி

ஊட்டி கமர்சியல் சாலையில் பல்பொருள் அங்காடி உள்ளது. இங்கு வாலிபர் ஒருவர் அத்தியாவசிய பொருட்களை வாங்குவது போல வந்து, கடையில் உள்ள பொருட்களை நோட்டமிட்டு திருடி சென்றார். இதுகுறித்து கடை உரிமையாளர் ஊட்டி மேற்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். இதில் 30 வயது வாலிபர் சில பொருட்களை ஒரு அட்டைப்பெட்டியின் மீது எடுத்து வைத்து விட்டு, மற்ற பொருட்களுக்கு மட்டும் பணம் செலுத்த சென்றார். அப்போது ஊழியர் பில் போடுவதற்குள் கண்ணிமைக்கும் நேரத்தில், அந்த வாலிபர் ஏற்கனவே எடுத்து வைத்திருந்த பொருட்களை தனது பையில் போட்டு நிரப்பி உள்ளார். பின்னர் அவர் சில பொருட்களுக்கு மட்டும் பணத்தை செலுத்தி விட்டு, அந்த பொருட்களையும் அதே பையில் வைத்துவிட்டு கடையில் இருந்து வெளியே சென்ற காட்சி பதிவாகி இருந்தது.

இதுஇதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story