நிறுவனத்தில் பொருட்கள் திருட்டு


நிறுவனத்தில் பொருட்கள் திருட்டு
x

மதுரையில் உள்ள நிறுவனத்தில் பொருட்கள் திருடப்பட்டு உள்ளன.

மதுரை

மதுரை புதூர் மண்மலைச்சாமி தெருவை சேர்ந்தவர் ஆனந்த். இவர் செக்யூரிட்டி சர்வீஸ் மற்றும் ஈவன்ட் மேனேஜ்மென்ட் நிறுவனம் நடத்தி வருகிறார். இவருடைய நிறுவனம் திலகர்திடல் பகுதியில் உள்ளது. சம்பவத்தன்று, இவர் வெளியே சென்றிருந்தபோது உள்ளே புகுந்த மர்ம நபர்கள், அங்கு வைக்கப்பட்டிருந்த ரூ.36 ஆயிரம் மற்றும் கணினி உதிரி பாகங்களை திருடிச் சென்றனர். இதுகுறித்து திலகர்திடல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Related Tags :
Next Story