காற்றாலையில் பொருட்கள் திருட்டு


காற்றாலையில் பொருட்கள் திருட்டு
x
தினத்தந்தி 17 Sept 2022 12:15 AM IST (Updated: 17 Sept 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

சங்கரன்கோவில் அருகே காற்றாலையில் காப்பர் பொருட்களை மா்மநபர்கள் திருடிச் சென்றனர்.

தென்காசி

சங்கரன்கோவில்:

சங்கரன்கோவில் அருகே உள்ள ஈச்சந்தா பகுதியில் தனியார் காற்றாலை நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்திற்கு தனியார் செக்யூரிட்டி நிறுவனம் மூலம் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் தனியார் செக்யூரிட்டி நிறுவனத்தில் கண்காணிப்பாளராக வேலை பார்த்து வரும் காசி பாண்டியன், அந்த காற்றாலை பகுதிகளில் சோதனையில் ஈடுபட்டார்.

அப்போது, காற்றாலையில் 1,240 கிலோ காப்பர் பொருட்கள் மற்றும் 1,200 லிட்டர் ஆயில் ஆகியவை திருட்டு போனது தெரிய வந்தது. இதன் மதிப்பு ரூ.15 லட்சம் ஆகும். இதுகுறித்து காசி பாண்டியன் சின்னகோவிலாங்குளம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை தேடி வருகின்றனர்.


Next Story