திருப்பாலபந்தல் அருகே வீட்டின் கதவை உடைத்து நகை திருட்டு - போலீசார் விசாரணை


திருப்பாலபந்தல் அருகே வீட்டின் கதவை உடைத்து நகை திருட்டு - போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 18 Jun 2023 6:45 PM GMT (Updated: 19 Jun 2023 1:20 AM GMT)

திருப்பாலபந்தல் அருகே வீட்டின் கதவை உடைத்து நகை திருடு போனது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனா்.

கள்ளக்குறிச்சி

திருக்கோவிலூர்,

திருக்கோவிலூர் அருகே உள்ள சீர்ப்பணந்தல் கிராமத்தை சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 60). சம்பவத்தன்று இவர் தனது வீட்டை பூட்டிவிட்டு அறந்தாங்கியில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றிருந்தார். அந்த சமயத்தில் வீட்டின் கதவை உடைத்து பீரோவிலிருந்த 3 பவுன் தங்க நகைகளையும் 200 கிராம் எடையுள்ள வெள்ளி பொருட்களையும் மர்ம நபர்கள் திருடி சென்றுவிட்டனர். இது குறித்த புகாரின் பேரில் திருப்பாலபந்தல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தனசேகரன் தலைமையிலான போலீசார் நேரில் சென்று விசாரித்தனர். மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.


Next Story