பூட்டிய வீட்டில் நகை திருட்டு


பூட்டிய வீட்டில் நகை திருட்டு
x

பூட்டிய வீட்டில் நகை திருட்டு

கோயம்புத்தூர்

சிங்காநல்லூர்

கோவை ஒண்டிப்புதூர் நெசவாளர் காலனியை சேர்ந்தவர் கருப்புசாமி (வயது 48), தனியார் மருத்துவமனையில் காவலாளியாக வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி மற்றும் தாயார் வீட்டை பூட்டிவிட்டு உக்கடத்துக்கு சென்றனர். பின்னர் அவர்கள் வீடு திரும்பியபோது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் உள்ளே சென்று பார்த்தபோது, பீரோ திறக்கப்பட்டு அதில் இருந்த பொருட்கள் அனைத்தும் கீழே சிதறிகிடந்தன. அதில் இருந்த 3 பவுன் நகையை காணவில்லை. அதை மர்ம ஆசாமிகள் திருடிச்சென்றது தெரியவந்தது.இது குறித்த புகாரின்பேரில் சிங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story