பாலக்கோடு அருகே மாரியம்மன் கோவில் உண்டியலில் பணம் திருட்டு வாலிபர் கைது


பாலக்கோடு அருகே  மாரியம்மன் கோவில் உண்டியலில் பணம் திருட்டு  வாலிபர் கைது
x

பாலக்கோடு அருகே மாரியம்மன் கோவிலில் உண்டியலை உடைத்து பணம் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

தர்மபுரி

பாலக்கோடு:

பாலக்கோடு அருகே மாரியம்மன் கோவிலில் உண்டியலை உடைத்து பணம் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

மாரியம்மன் கோவில்

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள தாசனஅள்ளி கிராமத்தில் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் வெளிப்புறத்தில் பக்தர்கள் காணிக்கை செலுத்த வசதியாக உண்டியல் வைக்கப்பட்டு இருந்தது நேற்று முன்தினம் இரவு மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர் ஒருவர் கோவிலில் வைக்கப்பட்டு இருந்த உண்டியலை உடைத்து பணத்தை எடுத்து கொண்டு இருந்தார்.

உண்டியல் உடைக்கும் சத்தம் கேட்டு அந்த ஊரை சேர்ந்த ரவிசந்திரன் என்பவர் திருடன், திருடன் என கூச்சலிட்டார். இதனால் அந்த நபர் தப்பியோட முயன்றார். கிராம மக்கள் அந்த நபரை பிடித்து பிடித்து பாலக்கோடு போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

வாலிபர் கைது

அப்போது அவர் பாப்பாரப்பட்டி அருகே உள்ள சக்கிலிநத்தம் பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி சதிஷ்குமார் (வயது22) என்பது தெரிய வந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் உண்டியலில் திருடிய ரூ.2 ஆயிரம், மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.


Next Story