என்ஜினீயர் வீட்டில் பணம், வெள்ளி பொருட்கள் திருட்டு


என்ஜினீயர் வீட்டில் பணம், வெள்ளி பொருட்கள் திருட்டு
x
தினத்தந்தி 26 Dec 2022 12:15 AM IST (Updated: 26 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

சங்கராபுரம் அருகே என்ஜினீயர் வீட்டில் பணம், வெள்ளி பொருட்கள் திருட்டு மர்ம நபர்கள் கைவரிசை

கள்ளக்குறிச்சி

சங்கராபுரம்

சங்கராபுரம் அருகே உள்ள தியாகராஜபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ரமணசங்கரன் மகன் காசிராமன்(வயது 40). சென்னையில் கம்ப்யூட்டர் என்ஜினீயராக வேலை பார்த்து வரும் இவர் தியாகராஜபுரத்தில் உள்ள வீட்டை பூட்டி விட்டு சென்னைக்கு புறப்பட்டு சென்றார். பின்னர் அங்கிருந்து கடந்த 16-ந் தேதி புறப்பட்டு சொந்த ஊருக்கு வந்த காசிராமன் வீட்டை திறந்து பார்த்தபோது பின்பக்க கதவு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே அறைக்குள் சென்று பார்த்தபோது பீரோவின் கதவுகள் திறந்து கிடந்தன. அதில் இருந்த ரூ.25 ஆயிரம் ரொக்கம், 3 வெள்ளி குத்துவிளக்கு, ராமர் வெள்ளிப்பாதுகை-1, வெள்ளி அகல் மற்றும் தட்டு-1, தாமிர பஞ்ச பாத்திரம்-1, சில்லரை நாயணங்கள் ரூ.1,800 ஆகியவற்றை யாரோ மர்ம நபர்கள் திருடிச்சென்று விட்டது தெரியவந்தது. இதன் மதிப்பு சுமார் ரூ.75 ஆயிரம் இருக்கும் என கூறப்படுகிறது.

இது குறித்து காசிராமன் கொடுத்த புகாரின் பேரில் சங்கராபுரம் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோ வழக்குப்பதிவு செய்து வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்து பீரோவில் இருந்த பணம் மற்றும் வெள்ளி பொருட்களை திருடிச்சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்.


Next Story