வீட்டின் கதவை உடைத்து பணம் திருட்டு; வாலிபர் கைது


வீட்டின் கதவை உடைத்து பணம் திருட்டு; வாலிபர் கைது
x

மானூர் அருகே வீட்டின் கதவை உடைத்து பணம் திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

திருநெல்வேலி

மானூர்:

மானூர் அருகே கானார்பட்டியைச் சேர்ந்தவர் மைதீன்பிச்சை மரியம்மாள் (வயது 61). இவர் கடந்த ஏப்ரல் மாதம் 29-ந்தேதி தனது வீட்டை பூட்டி விட்டு வெளியூருக்கு சென்றார். இதனை நோட்டமிட்ட மர்மநபர் நள்ளிரவில் நைசாக மைதீன்பிச்சை மரியம்மாளின் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்து, அங்கிருந்த பீரோவை உடைத்து அதில் இருந்த ரூ.1,750-ஐ திருடிச் சென்றார்.

இதுகுறித்த புகாரின்பேரில், மானூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில், மைதீன்பிச்சை மரியம்மாளின் வீட்டில் திருடியது தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு அருகே உசிலங்குளத்தைச் சேர்ந்த பழனி முருகன் மகன் லட்சுமணன் (25) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

1 More update

Next Story