கோவில் உண்டியலில் பணம் திருட்டு


கோவில் உண்டியலில் பணம் திருட்டு
x

நெல்லை அருகே கோவில் உண்டியலில் பணம் திருடியவர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

திருநெல்வேலி

நெல்லை அருகே கீழப்பாட்டம் தாமிரபரணி ஆற்றங்கரையில் காட்டு பகுதியில் உய்க்காட்டான் சுடலைமாடசாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு 2 உண்டியல்கள் தனித்தனியாக வைக்கப்பட்டன. கடந்த ஜனவரி மாதம் 5-ந்தேதி இந்த கோவிலில் உள்ள உண்டியலில் திருட்டு சம்பவம் நடந்தது. அதன்பின்னர் அந்த பகுதிகளில் கண்காணிப்பு கேமரா அமைக்கப்பட்டது.

இந்த நிலையில் கோவிலுக்கு சாமி கும்பிட சென்ற பக்தர்கள், கோவில் உண்டியல்கள் உடைக்கப்பட்டு காணிக்கை பணம் திருடப்பட்டது குறித்து ஊர் நாட்டாண்மையான முருகேசனிடம் தெரிவித்தார். முருகேசன் நேற்று முன்தினம் பாளையங்கோட்டை தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

1 More update

Next Story